உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவையாறில் தை அமாவாசையின் போது புனித நீராட தடை

திருவையாறில் தை அமாவாசையின் போது புனித நீராட தடை

தஞ்சாவூ்ர்: திருவையாறு, கொரேனா முன்னச்சரிக்கை காரணமாக, தை அமாவாசையின் போது, காவிரி ஆறு புஷ்ப மண்டப படித்துறையில், புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்பமண்டப படித்துறையில், ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில், ஆயிரக்கணக்கனோர், குடும்பத்தோடு வந்து புனித நீராடி, புரோகிதர்களிடம் தர்பணம் செய்து, ஐயாறப்பரை வழிப்பட்டு செல்வது வழக்கம். இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக, பொதுமக்களின் நலன் கருதி,  திருவையாறு தா்சில்தார் நெடுஞ்செழியன், பேரூராட்சித் செயல் அலுவலர் ராஜா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவையாறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்று படித்துறைகளில் நீராட, தர்பணம் செய்ய தடைவிதித்து பிளக்ஸ் வைத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் யாரும் திருவையாறுக்கு நீராடவோ, தர்பணம் செய்ய வரவேண்டாம் என்றும்  தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !