திண்டுக்கல்லில் தை அமாவாசை தர்ப்பணம்
ADDED :1741 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திண்டுக்கல் கோபாலசமுத்திரம் கரை, செட்டிநாயக்கன்பட்டி குளக்கரை, குடகனாறு ஆகிய பகுதிகளில் நீர் நிலைகளையொட்டி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தை அமாவாசை விரதம் இருந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதனால் நீர் நிலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பழநி: சண்முகநதி கரையில் ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களை நினைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். எள், பச்சரிசிசாதம் படைத்து, தீபம் ஏற்றி நதியில் கரைத்தனர். கோதைமங்கலம் மானுார் சுவாமிகள் கோயில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை தீபாராதனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.