மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1666 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1666 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1666 days ago
நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழா அரசு வழிகாட்டுதல்ககுளுடன் வருகிற பிப்.15 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.மறுநாள் காலை பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தனக்கருப்பு கோயிலை அடைந்து, ஊர்வலமாக மாரியம்மன் கோயில் சென்று காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் துவங்க உள்ளனர். அன்று இரவு அம்மன் குளத்தில் இருந்து கம்பம் எடுத்து வரப்பட்டு ஸ்தாபிதம் செய்யப்படும். பிப்.19 ல் மயில், பிப்.23 ல் சிம்மம், பிப்.26 ல் அன்ன வாகனங்களில் அம்மன் நகர்வலம் செல்வார். பிப்.28 ல் பக்தர்கள் பால்குடம் எடுப்பர். மார்ச் 1 அன்று அம்மனுக்கு மஞ்சள் பாவாடை எடுத்தல், மாலையில் அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்ச் 2, அதிகாலை முதல் அக்னி சட்டி எடுத்தல், கழுமரம் ஊன்றப்படும். மாலையில் விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கம்பம் அம்மன் குளத்தில் விடப்படும். மறுநாள் காலை மஞ்சள் நீராட்டு, இரவு அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் சென்று கோயிலை அடைவதுடன் விழா நிறைவடையும்.
1666 days ago
1666 days ago
1666 days ago