கோவில் கட்டண தரிசன முறை ரத்து 75 ஆயிரம் பேரிடம் கையெழுத்து!
ADDED :4874 days ago
உடுமலை:உடுமலை இந்து முன்னணி சார்பில், கோவில் கட்டண தரிசன முறையை ரத்து செய்யக்கோரி 75 ஆயிரம் பேருடன் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.உடுமலை இந்து முன்னணி சார்பில், பெரிய கடைவீதி நவநீத கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழாவின் போது, கோவில் கட்டண தரிசன முறையை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் வீரப்பன், நகர தலைவர் பாலாஜி, ஒன்றிய செயலாளர் செந்தில், சுஜீத், மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவிற்கு வந்தவர்களில், இரண்டு ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதுவரை 75 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது, என இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்தனர்.