உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் வைகாசி விசாகம் கோலாகலம்!

திருச்செந்தூரில் வைகாசி விசாகம் கோலாகலம்!

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்தது. பல லட்சம் பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் கோயில்களில் திருச்செந்தூர் முருகன் கோயில் தனி சிறப்பு வாய்ந்ததாகும். கோயில் மூலஸ்தானம் தரைமட்டத்தைவிட ஆழமாக இருக்கிறது. முருகனை தரிசனம் செய்து விட்டு வரும் போது படி ஏறி வருவதால் வாழ்வில் ஏற்றம் உண்டாகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் நடந்து வருகின்றது. முருகனின் அவதார தினமான வைகாசி விசாக திருவிழா தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று கொண்டாடப்பட்டது. முருகன் அவதார நாளான நேற்று ஒருநாள் தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் தரிசனம் செய்யும் பலன் கிடைக்கும் என்ற ஐதீகத்தால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்தனர். விசாக திருநாளை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது. விசாக திருநாளில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி அங்கபிரதட்சனை செய்தும், காவடிகள் எடுத்தும் நேர்ச்சை செலுத்தினர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசை ஏற்பாடு செய்திருந்தனர். நே ற்று மாலை சுவாமி ஜெயந்திநாதர் அம்பாளுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்து. பின்னர் சுவாமி அம்பாளுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து கிரிவீதி வழியாக வலம் வந்து கோயிலை வந்து சேர்ந்தார்.திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் ஏடிஎஸ்பி.,சாமித்துரைவேலு தலைமையில் டிஎஸ்பி., ஞானசேகரன், இன்ஸ்பெக்டர் இசக்கி, பிரதாபன் மற்றும் போலீசார் செய்திருந்தனர். திருச்செந்தூர் டவுன் பஞ்.,சா ர்பில் நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பாரத உழவாரப் பணிக்குழு மற்றும் திருமுருகன் திருச்சபை சார்பில் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு துறையினரின் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறு த்தப்பட்டிருந்தது. முக்கிய நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. திருநெல்வேலிக்கும், திருச்செந்தூருக்கும் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோ யில் தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் இணை ஆணையர் சுதர்சன் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !