திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பால் குடம் கோலாகலம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாக பால்குட திருவிழா, நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.குடம் குடமாக பாலாபிஷேகம்: காலை 7 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் புறப்பாடாகி, விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார்.சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலையில் பால் குடங்களை சுமந்து, பாத யாத்திரையாக வந்திருந்தனர். குடங்களில் இருந்த பால், சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு, பிற்பகல் 2 மணி வரை அபிஷேகம் செய்யப்பட்டது. பால் தவிர, இளநீர், பன்னீர், புஷ்பம், மயில், பறவை காவடிகளும் எடுத்து வந்தனர். பலர் முகங்களில், 20 அடி நீள வேலால் அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும் வந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மொட்டையரசு திருவிழா: விசாக விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று மொட்டையரசு திருவிழா நடக்கிறது.