பழநியில் நாளை முதல் தங்கரதம் புறப்பாடு
ADDED :1736 days ago
பழநி:பழநி மலைக்கோயிலில் நாளை (பிப்.15) முதல் தங்கரதம் புறப்பாடு துவங்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் காவடி, முடிகாணிக்கை, பாதயாத்திரை, அலகுகுத்தி வருதல், தங்கரதபுறப்பாடு என பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.கடந்த மார்ச் 20 முதல் கொரோனோ காரணமாக கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தங்கரத புறப்பாடும் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனோ பரவல் குறைந்து வருவதால் மலைக்கோயிலில் பல்வேறு சேவைகள் துவங்கப்படுகின்றன. நாளை முதல் தங்கரத புறப்பாடும் துவங்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்துகொள்ளலாம். 11 மாதங்களுக்கு பின் தங்கரத புறப்பாடு துவங்குவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.