உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கட்ட ராமர் கோவிலில் தேரோட்டம்

வெங்கட்ட ராமர் கோவிலில் தேரோட்டம்

வாழப்பாடி: வாழப்பாடி, அருநூற்றுமலை, பலாப்பாடி மலை உச்சியில், பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள், வெங்கட்டராமர் கோவில்கள் உள்ளன. அங்கு, தை தேர்த்திருவிழாவையொட்டி, கடந்த, 9ல், கரியராமர், 10ல், வரதராஜ பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம், வெங்கட்டராமர் கோவிலில், சக்தி அழைத்தல் நடந்தது. தொடர்ந்து, வெங்கட்ட ராமர் கோவில் தேரை, திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து, வலம் வந்தனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !