உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திவ்யதேச கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

திவ்யதேச கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

மயிலாடுதுறை: திருநாங்கூர் திவ்யதேச கோவிலில் நடந்த, 11 தங்க கருடசேவை உற்சவத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்ட பக்தர்கள் தரிசித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் பகுதியில், 108 வைணவ திவ்யதேசங்களான நாங்கூர் மணிமாடக்கோவிலில், 11 திவ்யதேச கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள், 11 தங்க கருடசேவை உற்சவம் நடக்கும். இவ்வாண்டு கருட சேவை உற்சவம், நேற்று முன்தினம் அதிகாலை நடந்தது. அதிகாலை, 12:30 மணிக்கு மணிமாடக் கோவில், ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுனிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர். தொடர்ந்து, 11 பெருமாள் சுவாமிகள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்யும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு தங்க கருட சேவை உற்சவம் நடந்தது. 1:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்தது. கருடசேவையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்ட பக்தர்கள் சேவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !