ஸ்ரீராமர் கோவில் திருப்பணி: தொழிலாளர்கள் பங்களிப்பு
ADDED :1733 days ago
திருப்பூர்:அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த சேஷத்திர அறக்கட்டளை சார்பில், நாடு முழுதும் வழங்கப்படும் பங்களிப்பு தொகை பெறப்பட்டு வருகிறது.ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ேஷத்திர அறக்கட்டளையினர், ஒவ்வொரு பகுதியாக வந்து, பங்களிப்பை பெற்று ரசீது வழங்குகின்றனர்.கொங்கு மெயின் ரோடு, செல்வ விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை செய்து, பணியை துவக்கினர்.கோட்ட செயலாளர் மோகனசுந்தரம், நகர செயலாளர் செந்தில்குமார், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட செயலாளர் மோகனசுந்தரம், வார்டு பொறுப்பாளர்கள் ராஜமாணிக்கம், ராம்குமார், சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ராமர் - லட்சுமணர் வேடமணிந்து வந்த சிறுவர்களுடன், திருப்பணிக்கு பங்களிப்பு பெற வந்த குழுவினரை, பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று, பங்களிப்பு தொகையை வழங்கினர்.