108 பால்குட ஊர்வலம்
ADDED :1780 days ago
புதுச்சேரி : வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 108 பால் குட ஊர்வலம் நடந்தது. புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், ஆர்ய வைசிய யுவ ஜன சேவா சங்கம் சார்பில், 33ம் ஆண்டு அக்னி பிரவேசத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை பால்குட ஊர்வலம் நடந்தது. வைசியாள் வீதியில் உள்ள வாசவி திருமண மண்டபத்தில் இருந்து 108 பால் குடங்கள் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டது. காலை 10:35 மணிக்கு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு மகா அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.