உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி திருவிழா!

சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி திருவிழா!

அழகர்கோவில்: அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் நேற்று வைகாசி விசாக திருவிழா நடந்தது.காலையில் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வந்தனர். முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடந்தது. பகலில் பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !