உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் மினி பிரம்மோற்சவம்

திருமலையில் மினி பிரம்மோற்சவம்

திருமலை திருப்பதியில் வருகின்ற 19 ந்தேதி ரத  சப்தமி எனப்படும் மினி  பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

திருமலை திருப்பதியில் நடைபெறும் திருவிழாக்களில் மிகப்பெரிய விழா ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவாகும்.இந்த ஒன்பது நாட்களிலும் திருமலைநாதரான சீனிவாசப் பெருமாள் ஒன்பது விதமான அலங்காரத்தில் மாடவீதிகளில் பக்கதர்களுக்கு மத்தியில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.

இந்த ஒன்பது நாள் விழாவும் ஒரே நாளில் வருடத்தில் ஒரு நாள் நடத்தப்படும் அந்த விழாவிற்கு  ரதசப்தமி என்று பெயர்.காலை முதல் மாலை வரை குறிப்பிட் நேர இடைவெளியில் ஒவ்வொரு வாகனம்  என்று ஒன்பது வாகனங்களிலும் பெருமாள் வலம் வருவார். கொரோனா காரணமாக கடந்த எட்டு மாதங்களாக எல்லா விழாக்களும் கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வழக்கம் போல மாடவீதிகளில் இந்த ரதசப்தமி விழா நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !