ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வரும் 27ல் மாசி மக தேரோட்டம்
ADDED :1728 days ago
கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், வரும், 27ல், புதிய தேரில் மாசி மக தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூரில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், 21.25 அடி உயரத்தில், புதிய சப்பரத்தேர், 9.20 லட்சம் ரூபாய், மதிப்பீட்டில் செய்யப்பட்டது. இது, கடந்த மாதம், 28ல், அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளோட்டம் நடந்தது. இந்நிலையில், சப்பரம் மீது கால்கள் அமைத்து, கூண்டு அமைக்கும் பணி நடந்து வருகிறது. குதிரை மற்றும் தேர் சிலைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதையடுத்து வரும், 27ல், மாசி மகத்தன்று தேர் திருவிழா நடக்க உள்ளது.