மாகாளியம்மனுக்கு 23ல் திருக்கல்யாணம்
ADDED :1773 days ago
சூலூர்: சூலூர் மேற்கு மாகாளியம்மன் கோவிலில், வரும், 23ம் தேதி திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடக்கிறது.சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள மேற்கு மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, 9ம் தேதி சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. வரும், 16ம் தேதி அக்னி கம்பம் நடப்படுகிறது. 23ம் தேதி அம்மை அழைத்தலும், திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.மறுநாள் நொய்யல் ஆற்றில் இருந்து அம்மை அழைத்தலும் திருவீதி உலாவும் நடக்கிறது. 25ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.