விநாயகர் கோயிலில் வசந்த பஞ்சமி விழா
ADDED :1727 days ago
தேவகோட்டை : தேவகோட்டை இறகுசேரி மந்திரமூர்த்தி விநாயகர் கோயிலில் வசந்த பஞ்சமி விழா சரஸ்வதி கடாட்சமாக இருக்கும் விநாயகருக்கு வித்யா கணபதி ஹோமம், சரஸ்வதி ேஹாமம் உட்பட சிறப்பு ேஹாமங்கள் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அபிேஷகம் நடைபெற்று வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கல்வியில் வெற்றி பெற விநாயகரிடம் வைத்து பூஜை செய்யப்பட்ட நோட்டு,புத்தகங்கள் உட்பட கல்வி பொருட்கள் ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. வசந்த பஞ்சமி பூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சரஸ்வதி சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.