வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக விழா துவக்கம்
ADDED :1728 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் அட்டவீரட்டானங்களில் ஒன்றாகும். ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் மாசி மக பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், யாகசாலை பூஜைகள் நடந்தது. பஞ்ச மூர்த்திகள் கொடிக்கம்பத்தின் அருகே எழுந்தருள, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, ரிஷபக் கொடி ஏற்றி விழா துவக்கி வைக்கப்பட்டது. விரைவில் கோவில் திருப்பணி துவங்க இருப்பதாலும், கொரோனா பாதுகாப்புக் காரணங்களுக்காக குறைந்த அளவு பக்தர்களுடன் விழாவை நடத்த இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.