ஜெகமுத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்
ADDED :1773 days ago
விருத்தாசலம் : விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் மணிமுக்தாறு, சித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பால்குடம் வைத்து, சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, ஆற்றில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.அங்கு, அம்மனுக்கு பாலாபிேஷகம் செய்தனர்.முன்னதாக, மணிமுக்தாற்றில் தண்ணீர் தேங்கி நிற்பதால், படிக்கட்டில் அமர்ந்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.