குலதெய்வ கோவில் திருவிழா: ஆடு பலியிட்டு நேர்த்திக்கடன்
ADDED :1774 days ago
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி தாலுகா, பண்ணந்தூர் தென்பெண்ணை ஆற்றின் கரையில், குலதெய்வ கோவிலான வேடியப்பன், முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. குலதெய்வ பூஜை திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை, கோவிலுக்கு சம்பந்தப்பட்ட கூம்புதாரர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, வேடியப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கறிவிருந்து அளித்தனர். இரவு, காலஅக்னி, சூலஅக்னி எனும் தெருக்கூத்து நாடகம் நடந்தது.