உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

குளித்தலை: வெள்ளாளப்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. குளித்தலை அடுத்த, வீரியம்பாளையம் பஞ்., வெள்ளாளப்பட்டியில் அமைந்துள்ள, அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பணி செய்யப்பட்டு பணி முடிவு பெற்றது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. கணபதி ஹோமத்துடன் பூஜை துவக்கப்பட்டு லட்சுமி ஹோமம், காயத்ரி மந்திரம், கோமாதா பூஜை, குபேர ஹோமம் உட்பட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டன. பிறகு, கோவில் கலசத்திற்கு சிவாச்சாரியார் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தோகைமலை தமிழ்ச்சங்க நிறுவன தலைவர் காந்திராஜன், தமிழ்ச்சங்க இயக்குனர் சந்தீப்குமார், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !