உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோவில் கட்ட ரத யாத்திரையில் நிதி வசூல்

ராமர் கோவில் கட்ட ரத யாத்திரையில் நிதி வசூல்

தலைவாசல்: விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, நிதி சேகரிக்க, ரத யாத்திரை, தலைவாசல், காய்கறி மார்க்கெட்டில், நேற்று முன்தினம் தொடங்கியது. ஊனத்தூர், பெரியேரி, ஆறகளூர், சிறுவாச்சூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று, நேற்று நிறைவடைந்தது. இதுகுறித்து, பரிஷத் அமைப்பினர் கூறுகையில், ரத யாத்திரையில், 10 ரூபாய்க்கு மேல் கொடுத்தோருக்கு, டோக்கனாகவும், 100, 1,000 ரூபாய்க்கு மேல் கொடுத்தோரிடம், காசோலையாகவும் பெறப்பட்டது. பலர், ஆர்வத்துடன் நிதி வழங்கினர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !