உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர், சிவன் கோவில்களில் நாராயணசாமி சிறப்பு பூஜை

விநாயகர், சிவன் கோவில்களில் நாராயணசாமி சிறப்பு பூஜை

 புதுச்சேரி; காங்., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கோவில்களில் சிறப்பு பூஜைகளை முதல்வர் நடத்தினார்.முதல்வர் நாராயணசாமி நேற்று காலை 6:30 மணி யளவில் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்றார். அபிேஷகம் முடியும் வரை மூலவர் சன்னதியில் பொறுமையாக அமர்ந்து தரிசனம் செய்தார்.தொடர்ந்து, முதல்வரின் பெயர், நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மனமுருக பிரார்த்தனை செய்தார். பின், கோவில் எதிரில் சூறை தேங்காய் உடைத்துவிட்டு புறப்பட்டார்.தொடர்ந்து, மாலையில் காந்தி வீதியில் உள்ள பிரசித்திப் பெற்ற வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். சுவாமிக்கும், அம்மனுக்கும் புதிய பித்தளை விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார். அவரது பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலை சுற்றி வந்து ஒவ்வொரு சன்னிதியாக பிரார்த்தனை செய்துவிட்டு ஒரு மணி நேரத்துக்கு பின் புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !