தங்க கருட வாகனத்தில் பூவராக சுவாமி வீதியுலா
ADDED :1772 days ago
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவில் மாசி மக உற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் உற்சவம் நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் உற்சவ பெருமாள் யக்ஞவராகன் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சாமி வீதியுலா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.