உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மின்னொளியில் ஜொலிக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவில்

மின்னொளியில் ஜொலிக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவில்

 விருத்தாசலம், : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிப்பதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்த வேண்டி, திருப்பணிக்குழு கமிட்டி அமைத்து திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் ஐந்து கோபுரங்கள், கொடி மரங்கள் புதுப்பிப்பு, சுவாமி சன்னதிகள், பிரகாரம், தரைத்தளம் சீரமைப்பு பணிகள் நடக்கிறது.தற்போது, மாசிமக பிரம்மோற்சவம் துவங்கியதால், கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அழகுபடுத்தும் பணிகள் நடக்கிறது. அதன்படி, கோபுரங்கள், கோவில் வெளிப்பிரகார சுற்றுச்சுவர் பகுதியில் மின்விளக்குகள், கோபுர அடுக்குகளில் தனித்தனி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இவை, மாலையில் இருந்து அதிகாலை வரை, கோவில் பகுதி மின்னொளியில் ஜொலிப்பதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !