வீரட்டானேஸ்வரர் கோவில் மாசிமக விழாவில் சுவாமி புறப்பாடு
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மாசி மக பெருவிழாவை முன்னிட்டு சுவாமி அதிகார நந்தி வாகனத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் மாசி மக பெருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று காலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், யாகசாலை பூஜைகள் நடந்தது. மூலவர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோபுர தரிசனம், தீபாராதனையுடன் மாடவீதியில் வலம் வந்தது. மாலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சோடசோபவுபச்சார தீபாராதனை தொடர்ந்து யாகசாலை பிரவேசம், பூர்ணாகுதி, சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.