பக்தர்கள் கரகம் எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்
ADDED :1704 days ago
கூடலூர்: மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் ஐந்து நாட்கள் திருவிழா கடந்த 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு வழி காட்டு முறைப்படி திருவிழாவை எளிமையாக நடந்து வருகிறது. சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. உள்ளூர் பக்தர்கள் சொந்த வாகனம், தனியார் வாகனங்களில், மிக குறைந்த அளவில் வந்து செல்கின்றனர். மூன்றாவது நாளான நேற்று, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உள்ளூர் பக்தர்கள் கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். தேரோட்டம் தவிர்க்கப்பட்டு, அம்மனை தோளில், சுமந்து திரு உலா மட்டும், நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.