மகாலட்சுமி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED :1698 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில் ஆண்டு விழாவில், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தேவராடிபாளையம் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவிலில், 14ம் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷகத்துக்கு, பல்வேறு கோவில்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, யாகசாலை வேள்வி வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மூலவர் மகாலட்சுமிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. மகாலட்சுமி உற்சவருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனை தொடர்ந்து, அம்மன் திருவீதி உலா நடந்தது. ஆண்டுவிழா வழிபாடுகளில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.