பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக விழா
ADDED :4972 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம், வெளிப்பட்டிணம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.