திருவேடகத்தில் பிரதோஷ விழா
ADDED :4921 days ago
திருவேடகம்:திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் நடந்த சனி பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏலவார்குழலியம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி கோயிலில் எள், நெய்விளக்கேற்றி பக்தர்கள் தரிசித்தனர். கோயில் சிவாச்சாரியார்கள் சுவாமி சன்னதியிலுள்ள நந்தீஸ்வரருக்கு 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். பின்னர் காளை வாகனத்தில் அம்மனுடன் சுவாமி ராஜஅலங்காரத்தில் சித்திரை வீதியில் எழுந்தருளினர். ஓதுவாருடன் பக்தர்கள் திருப்பாசுரம் பாடி சுவாமியை வழிப்பட்டனர். நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள், ஊழியர் முத்துவேல் விழா ஏற்பாடுகளை செய்தனர்.