சேக்கிழார் குருபூஜை
ADDED :4872 days ago
வத்திராயிருப்பு:சைவ சமயம் வளர்த்த 63 நாயன்மார்களில் ஒருவரான சேக்கிழார் பெருமான் முக்தியடைந்த திருநட்சத்திரத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் குருபூஜை வழிபாடு நடந்தது. ஐவர் சன்னதியில் உள்ள சேக்கிழார் உருவச்சிலைக்கு , 18 வகை அபிஷேகம், தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காசிவிஸ்வநாதர், விசாலாட்சியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடந்தன. முடிவில் சேக்கிழார் இயற்றிய பெரியபுராண பாராயணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை பக்தசபா நிர்வாகிகள், கோயில் நிர்வாக அதிகாரி சரவணன் செய்திருந்தார்.