உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா: முகூர்த்தகால் நடப்பட்டது

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா: முகூர்த்தகால் நடப்பட்டது

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவிற்காக உதவி ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் முகூர்த்தகால் நடப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற, தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.அதன்படி, சித்திரை திருவிழாவிற்காக தஞ்சை பெரிய கோவிலில் உதவி ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் முகூர்த்தகால் நடப்பட்டது. விழாவில், செயல் அலுவலர்கள், சிவச்சாரியார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !