உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் கோவில் செல்லும் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

சமயபுரம் கோவில் செல்லும் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

குளித்தலை: வை.புதூர் கிராமத்தில், சமயபுரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பால்குடம் எடுத்து தரிசனம் செய்தனர். குளித்தலை அடுத்த, வைகநல்லூர் பஞ்சாயத்து, வை.புதூர் கிராமத்தில், சமயபுரம் கோவிலுக்கு பாத யாத்திரையாக நடந்து செல்லும் பக்தர்கள், நேற்று காலை குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றிலிருந்து, பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர், மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு தீர்த்தம் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். மாலையில் பக்தர்கள் பாத யாத்திரையாக, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !