சிவாலயத்தில் சிறப்பு பூஜை
ADDED :1691 days ago
உடுமலை: சோமவாரப்பட்டி அமரபுயங்கரீஸ்வரர் கோவிலில், மாசி மாத சதுர்தசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த அமரபுயங்கரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், மாசி மாத சதுர்தசியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி, உற்சவர் நடராஜருக்கு, அபிஷேக, ஆராதானை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த, நடராஜர், அமரபுயங்கரீஸ்வரரை, திரளான பக்தர்கள் தரிசித்தனர்.