கோட்டை மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED :1762 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.11ல் பூத்த பூ அலங்காரத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று பூக்குழி இறங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் செவ்வாடை அணிந்து பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். சில பக்தர்கள் கையில் குழந்தையை வைத்தபடி பூக்குழியில் இறங்கினர்.அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து வந்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. தேரை ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். இன்று (பிப்.27) இரவு விடிய விடிய தசாவதாரம், நாளை (பிப்.28) மஞ்சள் நீராட்டுதல், நாளை மறுநாள் (மார்ச் 1) கொடியிறக்கம், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.