உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெணபலி முருகன் கோயிலில் மாசித்தேரோட்டம்

ரெணபலி முருகன் கோயிலில் மாசித்தேரோட்டம்

 ராமநாதபுரம்: மாசித் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம்அருகே பெருவயல் ரெணபலி முருகன்கோயிலில் பக்தர்களின் சரணகோஷத்துடன் தேரோட்டம் நடந்தது. இங்கு ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ரெணபலி முருகன் கோயில் உள்ளது.


இங்கு உள்ள ராமநாதசுவாமி, பர்வதமர்த்தினி அம்மன், சத்ருசம்ஹார வேல் ஆகியவற்றை வழிபட்டால் ராமேஸ்வரம், திருச்செந்துார் தலங்களுக்கு சென்றுவந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இந்தக்கோயிலில் கடந்த பிப்.,15 முதல் 27 வரை மாசி மகோத்ஸவ திருவிழா நடக்கிறது.விழாவில் தினமும் சுவாமி பல்லக்கு, சப்பரம் ஆகிய வாகனங்களில் உலா வருகிறார். பிப்.,23ல் சண்முகர் உற்ஸவம் 3 கால பூஜைகள் தொடர்ந்து அபிேஷக பூஜைகள் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (பிப்.,26 ல்)காலை 9: நடந்தது. சத்ருசம்ஹார வேல், சர்வ அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை தேரில் எழுந்தருளினர். ஒயிலாட்டம் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது.உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இன்று காலை, தீர்த்தவாரி, இரவு சுவாமி உற்ஸவத்துடன் மாசித்திருவிழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !