பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :1721 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கானக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். பவுர்ணமி மாசிமகத்தை முன்னிட்டு உலக நலன்வேண்டி, பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபம் யாகசாலையில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி வைத்தனர். கும்ப கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், ஸ்கந்த யாகம் மற்றும் வேதமந்திரங்கள் முழங்கினர். மதியம் 12:00 மணி உச்சிகால பூஜையில், மூலவருக்கு புனித கலசகும்பநீர் அபிஷேகம், சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது.