உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் மாசி மக தீர்த்தவாரி; பக்தர்கள் நீராடி வழிபாடு

அருணாசலேஸ்வரர் மாசி மக தீர்த்தவாரி; பக்தர்கள் நீராடி வழிபாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அருணாசலேஸ்வரர் மாசி மக தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் நீராடி வழிபட்டனர்.

திருவண்ணாமலையை ஆண்ட, வள்ளாள மஹாராஜா குழந்தை இல்லாமல், அருணாசலேஸ்வரரை நினைத்து வழிபட்டபோது, அருணாசலேஸ்வரரே அவருக்கு மகனாக பிறந்தார் என்பது ஐதீகம். இதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் திருவண்ணாமலை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாற்றங்கரையில், அருணாசலேஸ்வரர் மாசி மகத்தன்று, வள்ளாள மஹாராஜவிற்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.அதன்படி, நேற்று சூல வடிவிலான அருணாசலேஸ்வரர், துரிஞ்சலாற்றில் மூழ்கி தீர்த்தவாரி நடந்தது. இதை தொடர்ந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இதையடுத்து, பக்தர்கள் ஆற்றில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !