உலகை காத்த அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :1705 days ago
எண்ணுார் - சென்னை, எண்ணுார், ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, உலகை காத்த அம்மன் கோவில் பல லட்சம் ரூபாயில் புனரமைக்கப்ட்டு, நேற்று காலை, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, யாக சாலை பூஜைகள் நடந்தன. நிறைவாக மஹா பூர்ணாஹூதி நடந்தது.பின், கலசங்கள் புறப்பாடாகின. அதைத் தொடர்ந்து, உலகை காத்த அம்மன், பட்டரை முனீஸ்வரர், சக்தி விநாயகர், பால முருகன் சன்னதி விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளாேனார் பங்கேற்றனர்.