வராகி அம்மன் கோயிலில் மாசி மக அகல்விளக்கு வழிபாடு
                              ADDED :1705 days ago 
                            
                          
                           உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் மாசிமக பவுர்ணமியை முன்னிட்டு கோயில் முன்புறம் உள்ள சீதை புனல் தெப்பகுளத்தில் சிறப்பு பூஜை நடந்தது.
மாலை 7 மணி அளவில் 1008 அகல் விளக்குகளை பாக்கு மட்டை தட்டுகளின் மூலமாக விளக்குகளை வைத்து மலர் தூவியும் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். மூலவர் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு வெள்ளிக் கவச அலங்காரத்தில் காணப்பட்டார். பெண்கள் அம்மியில் பச்சை விரலி மஞ்சளை அரைத்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். அகல் தீப விழா ஏற்பாடுகளை மாதாந்திர பவுர்ணமி வழிபாட்டுக் குழு வி.வி.சரவணபாலாஜி, மங்கள பட்டர், ரவிகந்தன், குமார், பேஸ்கர் கண்ணன், ஜெயகார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.