உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்து கோயிலில் பங்குனி விழா: மார்ச் 18ல் கொடியேற்றம்

திருப்பரங்குன்றத்து கோயிலில் பங்குனி விழா: மார்ச் 18ல் கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மார்ச் 18 பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 31 திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது.

கொரோனா தடை உத்தரவால் கடந்தாண்டு பங்குனித் திருவிழா நடக்கவில்லை. இந்தாண்டாவது நடக்குமா என பக்தர்கள் எதிர்பார்த்தனர். பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்கும் வகையில் பங்குனித் திருவிழா நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மார்ச் 18 காலை 11:30 முதல் 11:45 க்குள் கொடியேற்றம் நடக்கிறது. மார்ச் 23 கைபாரம், 28 ல் பங்குனி உத்திரம், 30ல் பட்டாபிஷேகம், 31ல் திருக்கல்யாணம், ஏப்., 1 தேரோட்டம், 2ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழா நாட்களில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி ரத வீதிகளில் புறப்பாடு நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !