உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாணம் வைபவம்

ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாணம் வைபவம்

புதுச்சேரி : புதுச்சேரியில் திண்டிவனம் நல்லியகோடன் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம்நடந்தது.

திண்டிவனம் நல்லியகோடன் நகர் அலர்மேல் மங்காசமேத ஸ்ரீநிவாச பெருமாள் வைத்திக்குப்பம் மாசி மக தீர்த்த வாரியில் எழுந்தருள கடந்த 26ம் தேதி புதுச்சேரி வந்தடைந்தார். மறுநாள் 27 ம் தேதி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரியில் அருள்பாலித்து பின், வடமுகத்து வகுப்பு செட்டியார் திருமண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.மூன்றாம் நாளான நேற்று ஸ்ரீநிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. மாலை 6 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பட்டு, நேரு வீதி உள்பட முக்கிய வீதிகள் வீதியுலா வந்து மீண்டும் வடமுகத்து வகுப்பு செட்டியார் திருமண்டபத்தில் எழுந்தருளினார். இன்று 1ம் தேதி காலை 10.30 மணிக்கு உலக நன்மைக்காக மகா சுதர்சன ேஹாமம் நடக்கிறது.ஏற்பாடுகளை அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீநிவாச பெருமாள் மாசிமக உற்சவ வரவேற்பு கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !