பிளேக் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூமிதித்து நேர்த்திக்கடன்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில், பக்தர்கள் பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கிணத்துக்கடவு, பிளேக் மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மாமாங்கம் ஆற்றில் இருந்து சக்தி கரத்துடன், குண்டம் இறங்கும் பக்தர்கள் அழைத்து வருவதல் நிகழ்ச்சி நடந்தது.
பிளேக் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருள, சக்தி கரகத்துடன் பக்தர்களுடன் கோவிலுக்கு வந்தனர்.பிளேக் மாரியம்மன் மூலவர் சிலைக்கு வெண்ணைய் சாற்றப்பட்டது. குண்டத்துக்கு, பால், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம் போன்ற அபிேஷக பொருட்கள் ஊற்றி அபிேஷக பூஜை செய்யப்பட்டது.அதன்பின், சக்தி கரகம் எடுத்து வந்தவர்கள் குண்டத்தை மூன்று முறை வலம் வந்து குண்டம் இறங்கினர். தொடர்ந்து, பக்தர்கள் குண்டத்தில் பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தனர். ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் குண்டம் இறங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று, மஞ்சள் நீராட்டு விழாவும், இன்று, மதியம் 12:00 மணிக்கு மகா அபிேஷகத்துடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.