காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED :1715 days ago
வால்பாறை:வால்பாறை, காமாட்சியம்மன் கோவில் விழாவில், அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
வால்பாறை, வாழைத்தோட்டம் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலின், 53ம் ஆண்டு திருவிழாவையொட்டி, கடந்த, 22ம் தேதி காலை, 9:00 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது.நேற்று முன்தினம், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலிருந்து ஏகாம்பரஈஸ்வரர் மாப்பிள்ளை அழைத்து, காமாட்சியம்மன் கோவிலுக்கு திருமண சீர்வரிசையுடன் பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, ஏகாம்பரஈஸ்வரருக்கும், அன்னைகாமாட்சிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.