உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

 திருப்பூர்: திருப்பூர் ராமகிருஷ்ண பஜனை மடத்தில், ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண மகா உற்சவம் நடந்தது.திருப்பூர், ஓடக்காடு பகுதியில், ஸ்ரீகாஞ்சிகாமகோடி மடமும், ராமகிருஷ்ண பஜனை மடமும் உள்ளது. அங்கு, காஞ்சி காமகோடி பீடத்தின் வழிகாட்டுதலின்படி, வாராந்திர வழிபாடுகளும், பூஜைகளும் நடந்து வருகின்றன.உடுமலை பஜனை மண்டலி சார்பில், 79ம் ஆண்டு ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண உற்சவ விழா நேற்று விமரிசையாக நடந்தது. காலை, 9:00 மணிக்கு உஞ்சவிருத்தியும், அதனை தொடர்ந்து, அஷ்டபதி பஜனைகளும் நடந்தன.சிறப்பு ேஹாம வழிபாடுகளுடன், ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண உற்சவ விழா வழிபாடுகளும், மகா தீபாராதனையும் நடந்தது; தொடர்ந்து, பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !