உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் தேரோட்டம்!

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் தேரோட்டம்!

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.நேற்று காலை தேரடி பூஜை நடந்தது. மாலை 4.10 மணிக்கு சிங்கம்புணரி நாட்டார் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர் .பூரணை, புஷ்கலா சமேத சேவுகப்பெருமாள் சுவாமி பெரிய தேரிலும்,விநாயகர்,பிடாரிஅம்மன் சப்பரத்திலும் தேரோடும் வீதியில் பவனி வந்தனர். மாலை 5.30 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.எஸ்.பி.,பன்னீர் செல்வம் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று ஜூன் 5ல் தீர்த்தவாரி,இரவு சுவாமி வெள்ளி பூப்பல்லக்கு திருவீதி உலா, கலை, இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !