பிருந்தாவனத்தில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :1695 days ago
புதுச்சேரி; பிருந்தாவனத்தில் உள்ள சதானந்த விநாயகர் கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, சதானந்த விநாயகருக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது. மாலையில், நர்த்தன கணபதியாக மூலவருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, பிருந்தாவனம் குடியிருப்போர் நல வாழ்வு சங்க தலைவர் டாக்டர் புருஷோத்தமன், செல்வகாந்தி, தேவநாதன், வெங்கட் ராமானுஜம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.