காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா நிறைவு
ADDED :1696 days ago
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேர் திருவிழா வசந்தம் பூஜையுடன் நிறைவடைந்தது.
காரமடை அரங்கநாதர் கோவிலில், கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமகத் தேர் திருவிழா துவங்கியது. ஒவ்வொரு நாளும், ஒரு வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அரங்கநாதர் அருள் பாலித்தார். 25ம் தேதி பெட்டதம்மன் அழைப்பும், 26ல் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. 27ல் தேரோட்டமும், 28ல் குதிரை வாகனத்தில் பரிவேட்டையும் நடந்தது. மார்ச் முதல் தேதி தெப்போற்சவ விழா நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக, அரங்கநாத பெருமாள் ஷேச வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து வசந்தம் பூஜையுடன், மாசிமகத் தேர்த்திருவிழா நிறைவடைந்தது.