உலக அன்னதான நாளையொட்டி 108வது நாள் கிரிவல நிகழ்ச்சி
ADDED :1748 days ago
திருவண்ணாமலை: உலக அன்னதான நாளையொட்டி, அக்?ஷய சாய் தியான சபையின், 19ம் ஆண்டு நிறைவு விழா மற்றும், சாய்பாபா உருவ சிலையுடன், 108வது நாள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, அக்?ஷய சாய் தியான சபையின், 19ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டும், உலக அன்னதான நாளை முன்னிட்டும், சாய்பாபா உருவச்சிலையுடன், 108 நாட்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடந்து வந்தது. இதில், நிறைவு நாளான நேற்று, கிரிவலம் செல்லும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, உலக அன்னதான நாள் உறுதிமொழி ஏற்றனர்.