தண்டுமாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :1756 days ago
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, தண்டுமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. ராசிபுரம் அருகே, பட்டணம் பகுதியில் உள்ள, தண்டுமாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை, பூச்சாட்டுதலுடன் மாசி தேர்த்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு அபி?ஷகம், ஊர்வலம் ஆகியவை நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் ஊர்வலமாக வந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதி வழியாக சென்ற தேர், இறுதியில் நிலை சேர்ந்தது. இன்று சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.