உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யா வைகுண்டரின் 189 ஆவது அவதார தினவிழா

அய்யா வைகுண்டரின் 189 ஆவது அவதார தினவிழா

நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 189 ஆவது அவதார தின ஊர்வலம் நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்புக்கு புறப்பட்டு சென்றது. இவரது பிறந்த நாளான மாசி 20ஐ அவதார தினவிழாவாக அய்யாவழி பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது 189 ஆவது அவதார தினவிழா கொண்டாடப்பட்டது.நேற்று முன்தினம் நெல்லை, துாத்துக்குடி உட்பட தமிழ்நாடு-கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நாகர்கோவில் வந்தனர், நாகராஜாகோவில் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், தென்தாமரைகுளம் வழியாக சுவாமிதோப்பில் தலைமை பதியை ஊர்வலம் அடைந்தது. ஊர்வலத்தில் அய்யா வைகுண்டரின் அகிலதிரட்டு புத்தகத்தை, பக்தர்கள் பூப்பல்லக்கில் எடுத்து சென்றனர். மேளதாளம், முத்துக்குடைகள், குழந்தைகளின் கோலாட்டம் என களை கட்டியது. இந்த நாளில் சுவாமித்தோப்புக்கு நடந்து சென்று வழிபட்டால் நினைப்பது நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. விழாவுக்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !